சேலம் அருகே நேற்று வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று (ஜ.23) வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டுள்ளார்.
பென்னாகரத்தை சேர்ந்த ரோஷினி என்ற பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அந்த காதல் ஜோடி பெற்றோரின் சம்மதம் இன்றி காதல் திருமணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். பெண் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார் பெண்ணை கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றூ வீட்டில் இருந்த ரோஷினியை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். காதல் திருமணம் செய்ததால் பிடிக்காமல் பெற்றோர் அவரை கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய எடப்பாடி போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். கடத்தல் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கா, மாமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.