சேலம் மாமன்ற கூட்டத்தில் ரகளை- துணை மேயர் சஸ்பெண்ட்

 
சேலம் மாமன்ற கூட்டத்தில் ரகளை- துணை மேயர் சஸ்பெண்ட்

சேலம் காங்கிரஸ் துணை மேயர் சாரதா தேவியை இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார் திமுக மேயர் ராமச்சந்திரன்.


உள்ளாட்சி தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், முறையான உள்ளாட்சி விதிகளின்படி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேயருக்கு நிகராக நாற்காலியில் அமர்வதே நாடு முழுக்க கடைப்பிடிக்கப்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்பின் விதியாகும். ஆனால், சேலம் காங்கிரஸ் துணை மேயர் திருமதி சாரதா தேவி ஒரு பெண் என்பதால், அவரை அவையில் தகுந்த அங்கீகாரம் வழங்காமல், நாற்காலி வழங்குவதில் பாகுபாடு கண்ணோட்டத்துடன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வெளி ஆட்களை, குறிப்பாக அடியாட்களை அழைத்து வந்து கூட்டத்தை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்ட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சாரதாதேவியை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய மாநகர மேயர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், கூட்டரங்கில் அத்துமீறி நுழைந்து கோஷம் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினரை வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகர மேயர் புகார் தெரிவித்துள்ளார்.