சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்! - அமைச்சர் உதயநிதி ட்வீட்!!

 
udhayanidhi

INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Udhayanidhi

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். சேலத்தில் நாளை மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!

லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் 
@dmk_youthwing
-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது.

#INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். 

அனைவரும் வருக! என்று குறிப்பிட்டுள்ளார்.