எலி சாப்பிட்ட தின்பண்டம் விற்பனை- அரசு மருத்துவமனை கேண்டீனை மூட உத்தரவு

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கேண்டீனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை எலி சாப்பிடும் காட்சிகள் பொதுமக்களை உறைய வைத்தன. தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜியை எலியை கொறிக்கும் காட்சியை நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், கேண்டீன் நடத்துபவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த விவகாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த உணவுப் பொருட்களை எலி உண்பதாக புகார் எழுந்த நிலையில் கேண்டீனை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எலி சாப்பிட்டத்தை விற்பதாக மக்கள் வாக்குவாதம் செய்த நிலையில் கேண்டீனை மூட முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.