மாதச் சம்பளம் ரூ.39,900 வரை! கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் அரசுப் பணி - விண்ணப்பிப்பது எப்படி?
கோவை மாவட்டத்தில் தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. இநத் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இங்குள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஓதுவார், இரவுக் காவலர் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு இடங்கள் நிரப்பப்படுகிறது.
ஓதுவார் பணிக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவுக் காலவர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாத சம்பளத்தை பொறுத்தவரை, ஓதுவார் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வழங்கப்படும். இரவுக் காவலர் பணிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்ப படிவத்தை கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை ஜனவரி 24ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


