அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை!!

 
amma unavagam

அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25  ஊதிய உயர்வு வழங்கியது சென்னை மாநகராட்சி.

சென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு  வழங்கி சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ₹3.07 கோடி கூடுதல் செலவாகிறது.

amma hotel

அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது.

சமீபத்தில் அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ₹5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.