பாஜக தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது- சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

 
ச்

பாஜகவின் தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி, “பாஜகவின் தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். அதிமுகவை இன்று வழி நடத்துபவர்களை பார்த்தால் அச்சமாக உள்ளது.  நம்முடைய உயரம் மற்றும் தகுதி என்ன என்பதை அதிமுகவில் உள்ள தலைவர்கள் உணர வேண்டும். கட்சிக்காக பல்வேறு தியாகிகளை செய்தவன் நான். என் மீது 17 வழக்குகள் இருந்தன.

இளமை பருவத்தில் இருந்து அதிமுகவிற்கு விதை போட்ட என்னை பார்த்து வேலை வெட்டி இல்லாதவன் என்று சொல்வதா? தொண்டர்களால் உருவான இந்த இயக்கம் சில சுயநலவாதிகளால் சீரழிந்துவிடக்கூடாது. அதிமுக தொண்டர்கள், இந்த கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல நீங்கள் முயற்சி எடுக்கக்கூடாதா? எனக் கேட்கின்றனர். ஆகவே சொல்கிறேன். அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். நான் சொல்வதை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்... இல்லையென்றால் விட்டுவிடுங்கள்! தொண்டர்கள் உங்களுக்கு அதற்கான பாடத்தை புகட்டுவார்கள். நான் சொன்ன கருத்து பேசுபொருளாகியுள்ளது என்றால் அது வரவேற்க வேண்டியது என்றுதானே பொருள். அதிமுக எம்ஜிஆருடைய கட்சி” என்றார்.