சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இன்று தகனம்

 
tn

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. 

tn

இத்தொடர்பாக சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை பெருநகர மாநராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் 2024 பிப்ரவரி 04ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுரி மாவட்டத்தில் பயனம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது, மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

tn

அன்னாரது பூத உடல் நாளை 13/02/2024 செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு அவாது உடல் கீழ்கண்ட இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக யைக்கப்பட்டு இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தி நகரி) மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.