சைதை துரைசாமியின் மகன் மாயம்!!

 
tn

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற  கார் ஆற்றில் கவிழ்ந்த நிலையில் மாயமாகியுள்ளார். 

tn

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனரும் தலைவருமாக உள்ளார் சைதை துரைசாமி. இந்த அமைப்பு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில், முன்னாள் துணை முதல் அமைச்சரும் திமுகவின் வேட்பாளருமான மு.க.ஸ்டாலினிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டின் உள்ளாட்சி தேர்தல்களில் சென்னை மாநகராட்சி முதல் அதிமுக மேயர் என்ற பெருமை பெற்றார்.

tn

இந்நிலையில் இமாச்சல் அருகே சட்லுஜ் நதியில் கார்  கவிழ்ந்தது. காரில் 3 பேர் சென்ற நிலையில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.