ஸ்டாலினை துவழாமல் தூக்கிவிடும் ‘மாஸ்டர் மைண்ட்’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்... திமுகவின் முக்கிய அரசியல் வியூகவாதியான இவர், தேர்தல் கால கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, பிரச்சார திட்டம் உள்ளிட்டவற்றை கவனித்துவருகிறார். சில தொகுதிகளுக்கு தானே களத்தில் இறங்கி திமுகவுக்கு வேலையும் பார்த்துள்ளார்.

2011 தேர்தலுக்கு பிறகு திமுகவின் முடிவுகளை எடுப்பதில் கலைஞருக்கு உறுதுணையாகவும், ஸ்டாலினுக்கு பக்கபலமாகவும் நிழலாகவும் இருந்துவரும் சபரீசன், 2016 தேர்தல் துவங்கி ஸ்டாலினின் தனிப்பட்ட இமேஜை கட்டமைத்ததில் பெரும் பங்காற்றியவர். 2019 , 2021 , 2024 , 2026 ஆகிய தேர்தல்களில் ஒன்றுபட்ட கூட்டணியை கட்டமைத்ததில் பெரும் பங்காற்றியவர் . 10 வருட எதிர்கட்சியாக இருந்தாலும் 2021 தேர்தலில் திமுக தேர்தலை சந்திக்க , பண பலம் உட்பட அனைத்தையும் ஏற்பாடு செய்ததில் இவருடைய பங்கும் அதிகம். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக I-PAC நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டவர்.

கலைஞருக்கு முரசொலி மாறன் இருந்தது போலவே, ஸ்டாலினுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். 2026 தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தாலும் , அடுத்தது என்ன செய்யலாம்? , கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல செய்ய வேண்டியது என்ன என்பதை திமுகவின் நிழலாக இருந்து பணியாற்ற துவங்கியுள்ளார். நேரடி அரசியலுக்கு வருவார் என பலராலும் சொல்லப்பட்டாலும் , தற்போது வரை திமுகவின் நிழலாக இருந்து திரைக்கு பின்னால் கட்சியை கட்டிக்காப்பதில் ஸ்டாலினுக்கு உறுதுணையாக உள்ளார். சபரீசனின் பலம் அவரது தகவல் தொடர்பு திறன்தான் என திமுகவினரே சொல்வதுண்டு. அந்த அளவு கட்சியில் அனைவருடனும் நல்லுறவு, கூட்டணி கட்சியினர் மற்றும் போட்டி கட்சியினருடன் நல்லுறவு, ஸ்டாலினின் சகோதரி கனிமொழி மற்றும் மகன் உதயநிதியுடன் நல்லுறவு என உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை நல்லுறவு கொண்டிருக்கிறார். 68 வயது அரசியல்வாதியான ஸ்டாலினை Gen Z தலைமுறை தலைவராக மறுசீரமைப்பத்து, புதிய யோசனைகளை வழங்கிவரும் சபரீசன், ஸ்டாலினின் நம்பகமான ஆலோசகர் என்பதில் சந்தேகமே இல்லை.

