பிள்ளைகள் ஒன்று சேரும் போது குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது- விஜயின் தந்தை நெகிழ்ச்சி

அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தன்னை சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்களை நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திடீர் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அந்த நேரங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வாய்ஸ் நோட்-ஆக பேசி மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்த அவர், சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிள்ளைகள் ஒன்று சேரும் போது
— S A Chandrasekhar (@Dir_SAC) September 15, 2023
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது.🙂🙂 pic.twitter.com/OvXS9AZR2J
இந்நிலையில் சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், “பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோருக்கு மட்டும் அல்ல மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்ட பின்னர் தான் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டது குறிப்பிடதக்கது.