எஸ்.ஏ.சந்திரசேகர் திருத்தணியில் சாமி தரிசனம்..!
Updated: May 4, 2026, 08:56 IST1777865191914
திருத்தணி முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரம் தெரியவரும். இதன்மூலமாக தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

