திரைப்படங்களில் நடிகர்கள் அரசியல் பேசுவதால்தான் படங்கள் ஓடவில்லையா?- எஸ்.ஏ.சி.

 
எஸ்.ஏ.சி.,

தமிழ்நாட்டில் தமிழ் நடிகர்கள் அரசியல் பேசுவதால் தான் திரைபடங்கள் சரியாக ஓடவில்லை என்ற கருத்து தவறானது என்றும் எம்.ஜி. ஆர் காலம் முதலே திரைபடங்களில் அரசியல் இருந்து தான் வருகிறது எனவும் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? - மீடியாக்களிடம் இயக்குநர்  எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி - touringtalkies

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் தென்தாமரைகுளம் பகுதியில் நடைப்பெற்ற சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தமிழ் படங்களை விட பிற மொழி படங்களுக்கு மக்கள் இடையே சமீப காலமாக அதிக வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது, தமிழ் மொழி படங்கள் எவ்வாறு கேரளா தெலுங்கு என பிற மொழி மக்கள் வாழும் இடங்களில் அதிக வரவேற்புடன் ஓடுகிறதோ, அதேபோல் தான் தற்போழுது தமிழ்நாட்டிலும் பிற மொழி படங்கள் வரவேற்பு பெற்று வருகிறது. அதற்கு காரணம் அவர்கள் அதிக பெருட் செலவில்  மிக பிரம்மாண்டமாக திரைப்படங்கள் எடுத்து வருவதே காரணம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள நடிகர்கள் அதிகமாக அரசியல் பேசுவதால் தான் அவர்கள் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை என்ற கருத்து தவறு. 

தமிழ்நாட்டில் தமிழ் நடிகர்கள் அரசியல் பேசுவதால் தான் திரைபடங்கள் சரியாக ஓடவில்லை என்ற கருத்து தவறானது. எம்.ஜி. ஆர் காலம் முதல் ரஜினி உட்பட அனைத்து கால நிலையிலும்  திரைபடங்களில் அரசியல் இருந்து தான் வருகிறது. ஆகையால் இந்த கருத்து தவறானது” எனக் கூறினார்.