விஜய் அரசியலுக்கு வர காரணம்- எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன தகவல்

 
ச் ச்

இளைஞர்களும் சரி... தமிழ்நாட்டில் உள்ள மக்களும் சரி ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள் என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொம்பு சீவி பட இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “தவெக தலைவர் விஜய் சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதிக்கலாம். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உருவானதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதில் அவர் நடித்த சில படங்களும் காரணம். மாற்றம் என்பது மட்டும் மாறாதது. அது எல்லா துறையிலும் உண்டு. சமூகத்திலும் சரி... அரசியலிலும் சரி... திரையுலகிலும் சரி... மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது. அது காலத்தின் கட்டாயம். இளைஞர்களும் சரி... தமிழ்நாட்டில் உள்ள மக்களும் சரி ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள்.