சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் - தினகரன் ட்வீட்

 
ttv

சி.பா.ஆதித்தனார் நினைவு நாளில் அவரது  சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

சி. பா. ஆதித்தனார்  தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடி ஆவார்.  தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கி இவர் , அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்.  மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 1969 பிப்ரவரி இல் ஆட்சியைப் பிடித்தவுடன் ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆனார். இதில் ஸ்ரீவைகுண்டம் இருந்து அவர் அமைச்சரவைக்கு மறு தேர்வு செய்யப்பட்டார். 1971 தேர்தல்களில் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைவராக தொடர்ந்து பங்காற்றினார்.
 

tn


இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக தினத்தந்தி நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றிகண்ட மாமனிதர்; தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று.

புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம் பிடித்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம். " என்று குறிப்பிட்டுள்ளார்.