தமிழக ஆளுநராக மார்ச் 12ல் பதவியேற்கிறார் RV. ஆர்லேகர்!
Mar 9, 2026, 09:50 IST1773030030982
தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.
இந்நிலையில், வரும் 12ம் தேதி முற்பகல் சுமார் 12 மணியளவில், RV. ஆர்லேகர் பதவியேற்கிறார். அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஆா்.வி.ஆா்லேகா் வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி, தமிழக ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை ஆளுநா் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

