பேருந்தில் ஏறி போதையில் இளம்பெண் ரகளை- வீடியோ வைரல்

 
ச்

போதையில் அரசு பேருந்தில் ஏறி ரகளை செய்து பாடாய்படுத்திய இளம்பெண்ணை பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர்.


சென்னையில் அரசுப் பேருந்துகளில் மதுபோதையில் பயணிப்பது, மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் நடத்துநர் அல்லது ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் சென்னையில் மாநகர சொகுசுப் பேருந்து ஒன்றில் நள்ளிரவில் சுமார் 20 - 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மதுபோதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தட்டிக் கேட்ட பயணிகளுடன் அப்பெண் சண்டை இடுவதும், ஆபாசமாக பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். போதையில் அரசு பேருந்தில் ஏறி ரகளை செய்து பாடாய்படுத்திய இளம்பெண்ணை பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர்.