அதிகாரத்தால் ஆள்வது வேறு, அன்பால் ஆள்வது வேறு - முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி..!

 
1

முதல்வரை சந்தித்தது குறித்து பேட்டி அளித்த சி.விஜயபாஸ்கர், நாங்கள் இன்று முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். நான், எம்.ஆர்,விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரை முதல்வர் விஜய் தனித்தனியாக சந்தித்து பேசினார். 2 மணி நேரமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் விஜய் மிகுந்த அன்போடு, பாசத்தோடு, வாஞ்சையோடு, ஒவ்வொருவரையுமாக அழைத்து, தனித்தனியாக கை குலுக்கி, ஒவ்வொருக்கும் முன்பு நின்று, வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதேபோல் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நலம் விசாரித்து த.வெ.க துண்டை அவர்களுக்கு போட்டுவிட்டு, எங்களுக்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அரசு பணிகள் இருந்தாலும் கூட எங்களுக்காக நேரம் ஒதுக்கி, முக்கியத்துவம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் மூலம் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு ஏற்பட்டுள்ளது, அதிகாரத்தால் நாட்டை ஆள்வது என்பது வேறு, மக்கள் அன்பால் ஆள்வது என்பது வேறு, இன்றைக்கு ஒரு சாமானிய மக்களின் அன்பை வென்றிருக்கும் மாற்று சக்தியாக தலைமை பண்பை வெளிப்படுத்தி வரும், அனைவரையும் அரவணைக்கக்கூடியவராக விஜய் இருக்கிறார், 

இந்த நிகழ்வு முழுமையாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கிறது, இன எந்த தேர்தல் வந்தாலும் எல்லா தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு நாங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் பாடம் கற்றிருக்கிறோம். அந்த பாடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை ஏற்று, வெற்றிக்கு துணை நிற்போம் என்று சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.