வேட்புமனு தாக்கலுக்கான விதிமுறைகள் வெளியீடு..!

 
chennai corporation

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்;

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 06ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

* பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 05ம் தேதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது

* வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்

* தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

* வேட்பாளர்கள் வேட்புமனுவை இணையதளத்தில் (suvidha portal) பூர்த்தி செய்திடலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து நேரில் தாக்கல் செய்ய வேண்டும்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.