சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாகவே சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வந்துள்ளது. நேற்று பாதிப்பு கொஞ்சம் அதிகமாக இருந்ததால் உடனடியாக சிறைத்துறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரேபிட் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் சில மருத்துவர்கள் ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் எடுக்க பரிந்துரைத்ததால் அதுவும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது. இதனிடையே அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு இன்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்.

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குறைந்தது 14 நாட்களாவது அவர் தனிமைப்படுத்தப்படுவார். எனவே அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.