தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

 
PM Schools

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.

school

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர் ஏப்ரல் 20 முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளை நுழைவு நிலை வகுப்பில், அதாவது எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று  தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

School Education

அதன்படி வருகின்ற 2023 -24 ஆம் கல்வியாண்டின் இலவச மாணவர் சேர்க்கைக்கான  இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. இதுவரை தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்ப பதிவிற்காக ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 872 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வகையில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள பெற்றோர் என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  விண்ணப்ப பதிவு ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக்கல்வியின் உதவி மைய எண்ணுக்கு 11417 தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.