வீதிதோறும் நடக்குமா? விளையாட்டு அரங்கிலா? ஆர்.எஸ்.எஸ். பேரணி! அவசரமாக நாளை விசாரணை!

 
r

ஆர். எஸ். எஸ். அணிவகுப்பு குறித்து தமிழக அரசு செய்திருக்கும் மேல் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம் .  

ஆர் .எஸ். எஸ் அணி வகுப்பிற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனச் சொல்லி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுற்றுச்சுவர் உடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்தலாம் என்று அனுமதி அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.  

 இந்த உத்தரவை எதிர்த்து ஆர். எஸ். எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்திருந்தன.  மொத்தம் 45 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  அந்த வழக்குகளை எல்லாம் விசாரித்து நீதிபதிகள் மகாதேவன் ,முகமது சபிக் அமர்வு பிறப்பித்த உத்தரவில்,   பொதுச் சாலைகளில் பேரணி நடத்துவது,  அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை .  இது போன்ற  கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. தவிர முழுமையாக தடை செய்து விட முடியாது.  

rss

 சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை.   அந்த வகையில் ஆர். எஸ் . எஸ் பேரணிக்கு தேவையான பாதுகாப்பினை வழங்கி அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர் .  

சுற்றுச்சூழுடன் கூடிய மைதானங்களில் ஆ.ர் எஸ். எஸ் அமைப்பினர் பேரணி நடத்த வேண்டும் என்ற உத்தரவினை ரத்து செய்தனர் நீதிபதிகள் .   பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த அரசுக்கும் போலீசுக்கும் உத்தரவிட்டனர்.   

மூன்று தேதிகளை குறிப்பிட்டு பேரணிக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கும் படி ஆர். எஸ். எஸ் அமைப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  அவர்கள் குறிப்பிடும் அந்த மூன்று தேதிகளில் ஒரு தேதியில் பேரணியை நடத்த அனுமதி வழங்கும் படி அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.   ஒழுக்கத்தை கடைபிடித்து பேரணி நடத்த வேண்டும், பிறரை தூண்டும் வகையில் நடத்தக்கூடாது என்று ஆர். எஸ். எஸ் அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தனர் நீதிபதிகள்.  மேலும்,  அமைதியான முறையில் பேரணி நடைபெறுவதே உறுதி செய்கின்ற வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கும் உத்தரவிட்டிருந்தனர்.

 இந்த உத்தரவுக்கு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பனீந்தர் ரெட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அந்த மேல்முறையீட்டு மனுவில் பொது இடத்தில் கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொது நலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசுவிதிக்க முடியும்.  அதனால் ஆர். எஸ் . எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.  அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.  

su

 இதை அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பாக தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரத்தகி ஆஜராகி வாதத்தை எடுத்து வைத்தார். தமிழக முழுவதும் பேரணி நடத்த ஆர். எஸ் .எஸ் அமைப்பு கோரிக்கை விடுத்தது.   ஆனால் வீதி தோறும் பேரணியை அனுமதிக்க முடியாது சுற்றுச்சுவருக்குள் விளையாட்டு அரங்கம் போன்றவற்றில் நடத்துவதற்கு அரசு தெரிவித்திருந்தது.  இதை உயர்நீதிமன்ற தனிமை தனி நீதிபதி ஏற்று உத்தரவு பிறப்பித்தார்.  ஆனால் இரண்டு நீதிபதிகள் அமர்வு விருப்பப்படும் இடங்களில் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும்.  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

 இந்த பேரணி மார்ச் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது.   இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக வெள்ளிக்கிழமை விசாரணைக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளார்.   இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம்,   ஆர். எஸ் எஸ் பேரணி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை மார்ச் 3ஆம் தேதி நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது.