ரூ.35400 சம்பளம்..மத்திய அரசில் 1340 காலியிடங்கள்..!
அரசுப் பணிக்குக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.07.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1340 ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி
இந்த ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிப்ளமோ, B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
இந்த ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
இந்த ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- கணினி அடிப்படையிலான தேர்வு – பகுதி I (Computer Based Examination – Paper-I)
- கணினி அடிப்படையிலான தேர்வு – பகுதி II (Computer Based Examination – Paper-II)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள்/ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 30.06.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2025
எப்படி விண்ணப்பிப்பது:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 30.06.2025 முதல் 21.07.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, [https://ssc.gov.in/] என்ற இணையதளத்திற்குச் சென்று, “Apply” பட்டனைக் கிளிக் செய்து, முதலில் பதிவு (Register) செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, உள்நுழைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.


