மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு..

 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு..

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு   ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம்  ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை அடுத்த தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு   ரூ. 1,977 கோடி மதிப்பீட்டில், 224 ஏக்கர் பரப்பளவில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு   பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.  மதுரையைப் போன்று பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவனைக்கு அமைக்க பூமி பூஜை போட்ட செங்கல்லோடு நிறுத்தப்பட்டிருந்தது.  பல்வேறு அரசியல் கட்சியினரும் இதுகுறித்து விமர்சித்தனர்.  

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு..

இதனையடுத்து  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிறு பெறுவது தொடர்பாக, ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.  கட்டுமானப் பணிக்கான 85% நிதியை ஜைக்கா நிறுவனம் வழங்கும் என்றும்,  இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி என்றும் அறிவிக்கப்பட்டது.  ரூ. 5 கோடி செலவில் சாலைகள், சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கிறது.  

மன்சுக் மாண்டவியா

இந்நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 1,500 கோடியை  ஜைக்கா நிறுவனம் இதுக்கியிருப்பதாக மத்திய  சுகாதாரத்துறை  அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மொத்த திட்ட மதிப்பான ரூ. 1,977 கோடியில்  மீதமுள்ள  நிதியை அக்டோபர் 26-ந்தேதிக்குள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அவர் கூறினார்.  இதனையடுத்து  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.