திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் வைக்க கூடாது - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

 
rs

திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் வைக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று திமுக எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களும், அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டு இருக்கிறது. இதை அமைச்சர்  கே. என். நேரு திறந்து வைத்திருக்கிறார்.   இந்த திறப்பு விழாவிற்கான கல்வெட்டில் திருச்சி சிவா எம். பியின் பெயர் இடம் பெறவில்லை.  இதனால் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் நேருவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.   இந்நிலையில் இந்த நிலையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் சிலர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.   இந்த தாக்குதலில் திருச்சி சிவா வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது.  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்ததால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேருவின் காரை மறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது, நேரு ஆதரவாளர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

arivalayam

இந்நிலையில், திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் வைக்க கூடாது என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக்கூடாது. இந்த அறிவுரையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.