24 மணி நேரத்திற்குள் FIR போடாவிட்டால்... அரசுக்கு திமுக எச்சரிக்கை

 
24 மணி நேரத்திற்குள் FIR போடாவிட்டால்... அரசுக்கு திமுக எச்சரிக்கை

தவெகவை  விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டதற்காக தாக்கப்பட்டுள்ள திமுகவின் GenZ அமைப்பைச் சேர்ந்த கனீஷ் மீதான தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசுக்கு கெடு விதித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தவெகவை  விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டதற்காக தாக்கப்பட்டுள்ள திமுகவின் GenZ அமைப்பைச் சேர்ந்த கனீஷ் மீதான தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் திமுக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும். இதுதொடர்பாக தவெகவிற்கு துணை போகும் காவல்துறையே எதிர்கொள்ள வலுவான சட்டத்துறை அணி திமுகவிடம் உள்ளது. இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டால் அதனை சட்டத்தின் துணை கொண்டு முறியடிப்போம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால் விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். லேசாக விட்டதின் விளைவுதான் இது.. தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்.

பூச்சாண்டி காட்டுகிற வேலையை வைத்துக்கொண்டதால் அவ்வளவுதான்... அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் திமுகவை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தவெகவினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தால், போலீசார் FIR கூட போட மறுக்கிறார்கள். திமுகவினர் ஒருவரை கைது செய்தால் அதே பதிவோடு ஒரு லட்சம் பேர் வருவோம். மக்கள் பிரச்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். 40 நாள் தவெக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை பிரச்சினை உள்ளது” என்றார்.