“திமுகவின் 2 கோடி தொண்டர்கள் சார்பில் கமலுக்கு நன்றி” - ஆர்.எஸ்.பாரதி

 
s

2024 நாடாளுமன்ற தேர்தலில் இதே போல் நிபந்தனையற்ற ஆதரவை திமுகவிற்கு கமல்ஹாசன் தெரிவித்ததால்தான் தமிழ்நாட்டில் 40க்கு 40 வென்று காட்டி சரித்திரம் படைத்தது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கலைஞானி என்ற பட்டத்தை கொடுத்து, கலைஞரால் வளர்க்கப்பட்ட கலையுலக பிள்ளை கமல்ஹாசன். அவர் ஆதரவோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40/40க்கு வென்று காட்டி சரித்திரம் படைத்தது. அதேபோல இன்று அவர்கள் எடுத்திருக்கவும் முடிவால்  இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறும். திமுகவின் 2 கோடி தொண்டர்கள் சார்பில் கமலின் பெருந்தன்மைக்கு நன்றி” என்றார்.