“ஏழரை நாட்​டுச் சனி நம்மை விட்டு ஓடிப்போயிருச்​சு”- ஆர்.எஸ்.பாரதி

 
ஜெம் நிறுவனத்திடம் நிர்மல்குமார் பணம் வாங்கியுள்ளார்  - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

ஏழரை நாட்​டுச் சனி நம்மை விட்டு ஓடிப்போயிருச்​சு. அந்த சனியன்​களைச் சுமந்​ததால் தான் நாம் கோட்​டைக்​குப் போக முடியல என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கடந்த நவம்​பரில் அமைச்​ச​ராக இருந்த செந்தில் பாலாஜி, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு வாங்​கு​வதற்கு எல்லா வேலை​யும் செய்​து​விட்டு வந்​தார். ஆனால், ‘ஆதவ் அர்​ஜுனா கம்​பெனி’ அந்த டெண்​டரை ரத்து செய்து​விட்​டது. அந்த டெண்​டரை செயல்படுத்தி​யிருந்​தால் இந்த 3 மாதத்​தில் சென்​னை​யில் மின்​தடையே வந்​திருக்​காது. ஆந்​தி​ரா​வுக்​குப் போய் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37-க்கு வாங்​கு​வதன் மூலம் அரசுக்கு லட்​சம் கோடி நஷ்டம். மக்​கள் இவர்களை தெரிந்​து​கொண்டு விட்​டார்​கள். அதை இடைத்​தேர்​தலில் பார்த்​தோம். ஏழரை நாட்​டுச் சனி நம்மை விட்டு ஓடிப்போயிருச்​சு. அந்த சனியன்​களைச் சுமந்​ததால் தான் நாம் கோட்​டைக்​குப் போக முடியல” என்றார்