“சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது”- ஆர்.எஸ்.பாரதி

 
“சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது”- ஆர்.எஸ்.பாரதி

மா.சுப்ரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என ஆர்.எஸ்.பாரதி ஆத்திரமாக கூறினார்.



சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் புகழ்வணக்க பொதுக்கூட்டட்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மா.சுப்ரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது. கஞ்சா அடித்து விட்டு விசில் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டார்கள். சென்னை சைதாப்பேட்டைக்கு மா.சு. மிகப்பெரிய மருத்துவமனைஐ கட்டிக்கொடுத்துள்ளார். நோயாளியின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தாலே மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றவர்களே அவருக்கு வாக்களிக்கவில்லை. மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டுக்கொண்டனர். இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள் 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம்” என்றார்,