ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

 
rs bharathi annamalai

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மது விலக்குத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகின்றனர். அதே சமயம், திமுக அரசு மீது பழிபோடுவதற்காக இந்த மரணங்களுக்கு பின்னால் அரசியல் சதி இருக்கலாம் என்றும் திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

DMK RS Bharathi Attack On BJP Annamalai | அண்ணாமலை குற்றச்சாட்டுகளை  பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் | Tamil Nadu News in  Tamil

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற மாநிலத்தில் இருந்து தான் மெத்தனால் வந்திருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இவர் அனுப்பி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது” எனக் கூறியிருந்தார்.


கள்ளக்குறிச்சி விஷ சாராயம் பலி  அண்ணாமலை மீது சந்தேகம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த நிலையில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக ஒரு கோடி  நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 60-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு காரணமான திமுகவின் தவறான ஆட்சியை திசை திருப்பும் நோக்கில் அவதூறு மற்றும் பொய்ப் பிரச்சாரம் செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ்.பாரதியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதா அண்ணாமலை கூறியுள்ளார்.