கரூர் விவகாரம்- ஆதவ் அர்ஜூனா மீது ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு புகார்
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐயின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேசிவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து வருவதாகக் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான விசாரணை குழுவிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கடிதம் அனுப்பியுள்ளார். சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிய வலியுறுத்தப்பட்டுள்ளது. லும் ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்து கரூர் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதை கண்காணிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது சாட்சிகளை திசைத்திருப்ப வழிவகுக்கும், சிபிஐ விசாரணையை திசைத்திருப்பும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

