நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பவர்களா? ஆர்.எஸ்.பாரதிக்கு ஆர்.என்.ரவி கண்டனம்

 
rs bharathi

நாயை சாப்பிடும் கேடு கெட்டவர்கள் நாகலாந்து மக்கள் என்று நாகலாந்து மாநில மக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Gov Ravi may have come from Bihar who sells Pani puri, Soan papdi in Tamil  Nadu", says DMK leader Bharathi | Tamil-nadu News – India TV

ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “ நாகாலாந்து மக்கள் வீரம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், கௌரவமானவர்கள்.  துணிச்சல், கண்ணியம், நேர்மை மிக்க நாகாலாந்து இன மக்களை இழிவுப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம்.


நாகாலாந்து இன மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. நாகாலாந்து மக்களை நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது இழிவானது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களை இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.