கூட்டணி பற்றி பொது வெளியில் பேசக்கூடாது- திமுக நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை
Jan 27, 2026, 19:03 IST1769520822323
கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கழக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கழக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை கழகத்தலைவர் அவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


