ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

 
1 1

பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள பதிவில், , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாசாரத்தை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்

ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களை காவல்துறைக்கு ED அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,  அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்கியதன் மூலம் திறமையான இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.