ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு; நகைப் பிரியர்கள் கலக்கம்!
கடந்த மாதம் வரை சாமானியர்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. தங்கம் விலை தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் சவரன் விலை ரூ.15,000க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. இதனால் தங்க நகைகள் வாங்க நினைப்போர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த விலை குறைவுக்கு அமெரிக்க வட்டி விகிதம், டாலர் மதிப்பு வலுப்பெறுதல், சர்வதேச பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு காரணங்களை நிபுணர்கள் அடுக்கின்றனர். எனினும், இந்த விலை சரிவு தொடருமா? என்பது கேள்விக்குறி தான். அடுத்த மாதத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றியமைப்பதை பொறுத்து சர்வதேச சந்தையில் தங்கம் விலை கூடவோ அல்லது இன்னும் குறையவோ வாய்ப்பிருக்கிறது. எனினும், கடந்த இரண்டு வருட தொடர் விலையேற்றத்திற்கு பிறகு தற்போது ஒரு விலை வீழ்ச்சி இருப்பதால், அடுத்து இதே அளவிற்கோ அல்லது இதை விடவோ விலை ஏற்றம் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நேற்று (நவம்பர் 25) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், ஒரு சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.165-க்கு விற்பனையானது.

