உயர்கல்வித்துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள் திறப்பு
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ரூ. 96,75,49,000 செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை,… pic.twitter.com/0VMh9xoIGn
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 23, 2024
இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள்வரை உ உயர்கல்வித் துறை சார்பில் மொத்தம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 99 ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் பெண்கள் கழிப்பறை தொகுதி கட்டடங்கள்;என மொத்தம் 96 கோடியே 75 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.