பெஞ்சல் புயலில் சேதமான தளவானூர் அணைக்கட்டை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு

 
ச்

பெஞ்சல் புயல் காரணமாக உடைந்த தளவானுார் அணைக்கட்டை புரனமைக்க 84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தளவானூர் அணைக்கட்டு கரையில் மீண்டும் உடைப்பு ; விளை நிலத்திற்குள் புகுந்தது  வெள்ளம்

விழுப்புரம் மாவட்டத்தை கடந்த ஆண்டு தாக்கிய  பெஞ்சல் புயல் காரணமாக  விழுப்புரம் அடுத்த தளவானுார் அணைக்கட்டு கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. குறிப்பாக  50 மீட்டர் தொலைவுக்கு கரைப்பகுதி உடைந்தது.  இதனைத் தொடர்ந்து, தளவானுார் அணைக்கட்டு 84 கோடியில் புரனமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக 84 கோடியில் அணைக்கட்டு புரனமைப்பு பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதில்  அணைக்கட்டு புரனமைப்பு பணிக்கு 45 கோடி, மற்ற பணிகளுக்கு  18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக உடைந்த தளவானுார் அணைக்கட்டை புரனமைக்க 84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.