“ரூ.70 போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

 
க் க்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதானவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.70 கோடி போதை பொருள் பறிமுதல்: தி.மு.க. பிரமுகர் பின்னணி பற்றி அதிரடி  விசாரணை Rs70 crore drug seized DMK Action investigation about celebrity  background

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்க்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது, அவரிடமிருந்து சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை மத்திய போதை பொருள் தருக பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர்,இப்ராஹிம் என்ற இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களுக்கு சொந்தமான குடோன் ஒன்றில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 92 கிராம் பெத்தம் பெட்டமைன் என்கிற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி போதைப் பொருள் பறிமுதல்:  இலங்கைக்கு கடத்த முயன்றதாக 3 பேர் கைது | 70 crore worth of narcotics seized  at Kilambakkam ...

மொத்தம் இவர்களிடமிருந்து 6.92 கிராம் மெத்தம் பெட்டமைன் போதைப்படை பறிமுதல் செய்துள்ளனர் இதன் சர்வதேச மதிப்பு 70 கோடி இருக்கும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்படும் நபர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் மதிப்புடைய பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் மூவரும் இந்த போதை பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் பின்னணியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.