சென்னையில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் கொள்ளை

 
பெப்பர் ஸ்பிரே

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(55). இவர் வெளிநாட்டு பணத்தை நம் நாட்டு பணமாக மாற்றும் வேலை  செய்து வருகிறார். நேற்று இரவு பண பரிமாற்றத்திற்காக, 50லட்ச ரூபாய் பணத்துடன் தனது நிறுவன ஊழியர் காஜாமொய்தீனுடன் இருசக்கர வாகனத்தில் சவுகார்பேட்டைக்கு சென்றுள்ளார். 

சென்னை: பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் கொள்ளை- 3 பேரிடம் விசாரணை |  Thieves stole Rs 50 lakh by pepper spray in Chennai | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

அப்போது யானைகவுனி பெருமாள் கோவில் அருகே செல்லும் போது இருசக்கர வாகனத்தில் ஜாகிர் உசேனை பின்தொடர்ந்தது வந்த இருவர் வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் பெப்பர் ஸ்பிரேவை இருவர் கண்ணிலும் அடித்துவிட்டு ஜாகீர் உசேன் கையில் வைத்திருந்த 50லட்ச ரூபாய் பையை பறித்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக ஜாகீர் உசேன் யானைகவுனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து  ரூ.50 லட்சத்தை பறித்து சென்ற கொள்ளையர்களை தேட தொடங்கினர்.

இரவு பத்து மணி அளவில் பெற்ற புகாரில் இரண்டு மணி நேரத்தில் காவல் துறையினர் முக்கியத்துப்பை துலக்கியதோடு, ஜாகிர்  உசேன் உடன் பயணித்த காஜாமொய்தினை சந்தேக வளையத்தில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜாகிர் உசேனிடம் பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில். அடிக்கடி ஜாகிர் உசேன் பணத்தை கை மாற்றுவதற்காக செல்வதை அறிந்து கொண்டு தினசரி செல்லும் மதுபான கடையில் நண்பரான ஆர்க்காட்டைச் சேர்ந்த அஜித் என்பவரிடம் ஜாகிர்  உசேன் குறித்த தகவல்களை தெரிவித்து, அவரிடம் கொள்ளையடித்தால் காவல்துறையிடம் சிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். 

அஜித் தனது ஊர்  நண்பனான சுபாஷ் என்பவரிடம் தெரிவித்த நிலையில் இரண்டு  நாட்களாக ஜாகீர்  உசேனை ஆறு பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து உள்ளனர். சம்பவத்தன்று ஜாகிர்  உசேன் மற்றும் காதர் மொய்தீன் இருசக்கர வாகனத்தில் செல்ல, சுபாஷ் மற்றும் அஜித் இவர்களை பின்தொடர்ந்து ஸ்ப்ரே அடித்து வழிப்பறியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். சென்னை புறநகர் பகுதிக்கு சென்று ஆறு பேரும் பணத்தை பிரித்துக் கொண்டு தப்பிக்கும்போது மூலக்கொத்தளம் சிக்னல் அருகே சுபாஷ் மற்றும் அஜித்தை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 29 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.