ரூ.5 கோடி பேரம் விவகாரம்.. அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக புகார்..!

 
1

சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

''இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்… அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என்று ஒருவர் பேசினார். சிரித்து கொண்டே லயாலா மணி இடம் சொல்லி அனுப்பினேன்.
 

500 கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும், பொருத்தம் இல்லாத ஒரு நபருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார். நான் தளபதியின் தம்பி என்றேன். பொருத்தம் உள்ள குப்புசாமி அண்ணனுக்கு ஒரு ரூபாய் வாங்காமல் அந்த பதவியை தர சொல்லி இருக்கிறார் என்று சொல்லி அனுப்பினேன். அவருக்கு செய்வது எங்களது கடமை. இவ்வாறு ராஜ்மோகன் பேசினார்.

லஞ்சம் கொடுப்பதும், கேட்பதும் குற்றமாகும் என்பதால், அமைச்சர் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் போன்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (நவ.1) நடந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கூறிய தகவலையே ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவைச் சேர்ந்த பரந்தாமன் மனு அளித்துள்ளார்.