பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மங்களூர் கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

ச்

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மங்களூர் கிராமம், மேட்டுத் தெருவில் வசிக்கும் திரு.செந்தில் (வயது 45) த/பெ.முத்துகருப்பன் என்பவர் இன்று (29.10.2025) மாலை சுமார் 04.00 மணியளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில் உடனடியாக சிகிச்சைக்காக மங்களூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.