#BREAKING வறட்சி பாதிப்பை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு
Aug 7, 2026, 19:52 IST1786112571467
வறட்சி பாதிப்பை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.
வறட்சி பாதிப்பை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் அவசர நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு ரூ.36.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சித் துறைக்கு ரூ.96.41 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்த்துளை கிணறுகள் அமைத்தல், கிணறுகளை சீரமைத்தல், பாசன கால்வாய்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

