குழந்தை பெற்றால் ரூ.25,000 ஊக்கத்தொகை! முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி..!!

 
Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

மாநிலத்தின் கருவுறுதல் விகிதம் தற்போது 1.5 ஆக குறைந்துள்ளதாகவும், இது நிலையான மக்கள் தொகைக்குத் தேவையான 2.1 என்ற அளவை விட மிகவும் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதனை சரிசெய்ய, இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்கள் குறைவதைத் தடுக்க இத்தகைய 'மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை' அவசியமாகிறது.

இந்த புதிய கொள்கை மார்ச் 2026 இறுதிக்குள் முறைப்படி வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.