ரூ.2000 நோட்டுகள் செல்லாது.. கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரம் - மு.க.ஸ்டாலின்..

 
MK Stalin

கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரமே ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும்  மணிக்கணக்கில் வரிசையில் காத்துக்கிடந்து கடும் சிரமங்களுக்கு ஆளாகினார்.  அதன்பின்னர் 2000 ரூபாய் நோட்டுகள்  ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

ரூ.2000 நோட்டுகள் செல்லாது.. கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரம் - மு.க.ஸ்டாலின்..

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தினமும் ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின்னர் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்பால் நடுத்தர வர்கத்தினர், சிறு குறு வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். மீண்டும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர். ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

modi

அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக தேர்தல் படுதோல்விலை மறைக்கும் ஒற்றை தந்திரமே ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு  என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.