பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூ.20 லட்சம் பறிமுதல்- அமலாக்கத்துறை அதிரடி
பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான 2 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019- நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிட்ட நிலையில். இவர்கள் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 11 கோடியே 52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று காலை முதல் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் சிமெண்ட் குடோனில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு சோதனை நிறைவடைந்த நிலையில், பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டிலிருந்து உரிய ஆவணம் இல்லாத சுமார் 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.