ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து

 
பச்சை நிற 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு - ஆவின் நிறுவனம் மறுப்பு..

ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு மாதாந்திர பால் அட்டையில் அளிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி நிறுத்தப்படுவதாக கோவை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. எம்.ஆர்.பி. விலையிலேயே மாதாந்திர அட்டைத்தாரர்களுக்கும் இனி விற்கப்படும் என்றும், பிரதி மாதம் 11-25 தேதிக்குள் app வழியே பணம் செலுத்தி அட்டையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், “கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடியானது ஜுலை 1 முதல் நிறுத்தம் செய்யப்படும் என்ற ஆவின் அறிவிப்பு குறித்த செய்தியானது கடும் கண்டனத்திற்குரியது. மாதந்தோறும் இந்தச் சலுகையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான நடுத்தர, ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாகும். மக்களின் அத்தியாவசிய தேவையான பாலில் கூட சலுகையை பறிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே, மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பழைய நடைமுறையையே தொடர ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.