தேர் கலசம் தவறிவிழுந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி- மு.க.ஸ்டாலின்

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராமசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தேரின் கலசம் தவறி விழுந்து தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர்” - திமுகவினருக்கு  மு.க.ஸ்டாலின் அறிவுரை | CM MK Stalin Comments on BJP - hindutamil.in

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ராமசாமிபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 24.06.2024 அன்று மாலை தேரோட்டத்திற்காகத் தேரை தயார் செய்யும் பணி நடைபெற்றபோது, தேரின் மேற்பகுதியில் கலசத்தை பொருத்துகையில், கலசம் தவறிவிழுந்து தேர் ஒருபுறமாகச் சாய்ந்ததால் எதிர்பாராதவிதமாக கீழே தவறிவிழுந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மாத்தூர். ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் (வயது 70) த/பெ.சபாபதி என்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.