துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 2.83 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

 
gold

துபாயிலிருந்து 2.3.2023 அன்று சென்னை வந்த விமானத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரூ. 1.52 கோடி மதிப்பிலான 3,120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கைகளுக்கு அடியில் பசை வடிவில் இரண்டு பாக்கெட்டுகளில் தங்கத்தை பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Chennai Airport a den of chaos and confusion for passengers - Citizen  Matters, Chennai

மலேசியாவிலிருந்து வந்த ஒரு ஆண் பயணியை பரிசோதித்ததில் ரூ.98.04 லட்சம் மதிப்பிலான 2,000 கிராம் எடை கொண்ட தங்கம் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல் 2.3.2023 அன்று துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணியை பரிசோதித்ததில், 422 கிராம் எடைகொண்ட  2 தங்கச் சங்கிலிகள், 240 கிராம் எடைகொண்ட 6 வளையல்கள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 31.46 லட்சம் ஆகும்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு மேத்யு ஜாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.