மணல் ஒப்பந்ததாரர்களிடம் ரூ.2.33 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை

மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல்லிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
ED carried out searches at 34 locations including 8 sand mining yards on 12/09/2023 in 6 districts of Tamil Nadu, residential and business premises of various persons including S. Ramachandran, K. Rathinam, Karikalan and their accomplices, Auditor P. Shanmugaraj
— ED (@dir_ed) September 15, 2023
இந்நிலையில் அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 8 மணல் குவாரிகள் மற்றும் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி. சண்முகராஜ் உள்ளிட்டோரின் வீடு மற்றும் வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என 34 இடங்களில் சோதனை நடத்தினோம். மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சோதனையில், பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ.2.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.12.82 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.56.86 லட்சம் மதிப்பிலான 1024.6 கிராம் எடை தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.