ரூ. 35-க்கு 1GB டேட்டா + 28 நாட்கள் OTT சலுகை: VI நிறுவனத்தின் புதிய திட்டம்..!

 
1

வோடஃபோன் ஐடியா (VI) நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காகக் குறைந்த விலையில் ரூ.35 மதிப்பிலான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் 1GB டேட்டாவும், 28 நாட்கள் பயன்பாட்டுடன் OTT சந்தாவும் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக Vi Movies & TV மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் இரண்டு முன்னணி ஓடிடி தளங்களைத் தேர்வு செய்து கண்டென்ட்டுகளைப் பார்க்கலாம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (Vi), தனது ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவில் புதிய ரூ. 35 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு 'டேட்டா வவுச்சர்' (Data Voucher) என்பதால், வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் தனிப்பட்ட சேவை வேலிடிட்டி (Service Validity) கிடைக்காது.

இந்த ரூ. 35 திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது. இது வெறும் டேட்டாவிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட திட்டம் அல்ல; மாறாக OTT (Over-The-Top) பலன்களையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவமான சலுகையாகும்.

ரூ. 35 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • வேலிடிட்டி: 7 நாட்கள்.

  • டேட்டா: 1 GB டேட்டா.

  • OTT பலன்கள்: 'Vi Movies & TV' மொபைல் செயலியில் உள்ள ஏதேனும் இரண்டு பிரீமியம் OTT தளங்களை 28 நாட்களுக்குப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

  • தினசரி செலவு: நாளொன்றுக்கு தோராயமாக ரூ. 5 மட்டுமே.

குறைந்த செலவில் OTT பலன்களை மட்டுமே விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) உத்தரவின்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ரூ. 142, ரூ. 156 மற்றும் ரூ. 158 ஆகிய மூன்று புதிய ப்ரீபெய்ட் வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • ரூ. 142 திட்டம்: 28 நாட்கள் சேவை வேலிடிட்டி (தினசரி செலவு தோராயமாக ரூ. 5.07).

  • ரூ. 156 திட்டம்: 30 நாட்கள் சேவை வேலிடிட்டி (தினசரி செலவு தோராயமாக ரூ. 5.20).

  • ரூ. 158 திட்டம்: 1 காலண்டர் மாதம் வேலிடிட்டி (தினசரி செலவு தோராயமாக ரூ. 5.27).

இந்த மூன்று திட்டங்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calls) மற்றும் மொத்தம் 300 SMS சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சேவை வேலிடிட்டி மட்டுமே மாறுபடுகிறதே தவிர, டேட்டா நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. டேட்டா தேவையில்லாமல் வெறும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இவை பயனுள்ளதாக இருக்கும்.